Monday 13 March 2017

மூலத்திற்கான மிகச் சிறந்த சித்த மருத்துவம் முறைகள்

மூலத்தின் அறிகுறிகள்:
ஆசனவாயில் உதிர போக்கு , ஆசனவாயில் எரிச்சல், ஆசனவாயில் வீக்கம் இதுவே மூலத்தின் அறிகுறிகள்.


மூலம் வர காரணமும் வராமல் இருக்க வழிமுறையும்:
               
                                          மூலம் வருவதற்கான முதல் காரணம் உடல் சூடு ஆகும்.உடலை சரியான வெப்ப நிலையில் இருக்கும் போது நமக்கு பிரச்சினைகள் வருவது இல்லை....பஞ்சு வைத்த மேலை நாட்டு நாற்காலிகளே பெரும்பாலோருக்கு மூலம் வர காரணம் ஆகும்... சாதாரண மரநாற்காலியில் உட்காருங்கள் இல்லை வயர்களால் பின்னப்பட்ட நாற்காலியை பயன்படுத்துங்கள்.அதிக காரம் உள்ள உணவை உட்கொள்ளாதீர். தண்ணீர் அதிகம் முறை அருந்துங்கள். பழம் காய்கறிகள் அதிகமாக சாப்பிடுங்கள். நார்சத்து உணவு வகைகளான வாழைத்தண்டு,பீன்ஸ், முள்ளங்கி ஆகியவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

மூலநோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1.அதிக காரம்
2.கோழிகறி
3.குளத்து மீன்
4.இரால்,நண்டு
5.பேக்கரி தின்பண்டங்கள்

மூலம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை:

1.சின்ன வெங்காயம்
2.கருணைகிழங்கு
3.வாழைத்தண்டு
4.இளநீர்.

மூலநோயின் மிகச்சிறந்த வலி நிவாரணி:
நீங்கள் மூலநோயால் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா.அப்படியானால் இதனை கடைபிடியுங்கள். தினமும் இரவு படுப்பதற்கு செல்லும் முன் வேப்பணெய் எடுத்து ஆசானவாயில் தடவவும்.பின் நல்ல சுத்தமான மஞ்சள் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து உள்ளங்கையில் இட்டு பின் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து பின் ஆசனவாயில் தடவுங்கள் இரண்டு நாட்களில் உங்களுக்கு ஆசானவாயில் எரிச்சலோ உதிர போக்கோ இருக்காது. இதனை தினமும் கடைபிடியுங்கள் நல்ல முன்னேற்றம் தெரியும். என்றாவது ஒரு நாள் ஆசையை கட்டுப்படுத்தாமல் ஒன்று அல்ல இரண்டு துண்டு இறைச்சியை உண்டுவிட்டால் சின்ன வெங்காயம் நான்கு எடுத்து உரித்து பச்சையாக தின்று விடுங்கள் பிரச்சணை இருக்காது . இதுவே மிகச்சிறந்த வலி நிவாரணி.